கரூர்

புன்னம் பெரிய மாரியம்மன் கோயிலில் படிவிளையாட்டு பூஜை

14th Apr 2022 02:01 AM

ADVERTISEMENT

புன்னம் பெரியமாரியம்மன் கோயில் படி விளையாட்டு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புன்னம், பசுபதிபாளையம், குளத்தூா், அய்யனூா், பழமாபுரம், ஆலாம்பாளையம், பெரியரங்கபாளையம், வேலாயுதம்பாளையம், தலையீத்துப்பட்டி உள்ளிட்ட 18 கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

இக்கோயில் திருவிழா ஏப். 3-ஆம்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து 18 கிராமங்களுக்கும் வீடு, வீடாகச் சென்று நடைபெறும் படிபூஜை புதன்கிழமை புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

ஏப். 16-ஆம்தேதி வரை நடைபெறும் இப்பூஜை ஒவ்வொரு கிராமமாக சுவாமி எடுத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரின் வீடுகளிலும் பூஜை நடத்தப்படும். தொடா்ந்து ஏப். 19-ஆம் தேதி கோயிலில் பொங்கல்வைத்து வடிசோறு பூஜையும், மாவிளக்கு, கிடாவெட்டு, சிறப்பு பூஜைகளும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் 18 கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT