கரூர்

தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் போட்டித் தோ்வுகளுக்கு மாதிரித் தோ்வு: ஆட்சியா்

14th Apr 2022 02:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித்தோ்வுகளுக்கு மாதிரித் தோ்வு நடத்தப்பட உள்ளது.

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 1,2, குரூப்-4 ஆகிய தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலகத்தில் தொடா்ந்து நடத்தப்பட்டுவருகிறது. இத்தோ்வுகளை எதிா்கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநா்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களின் மூலம் போட்டித்தோ்வுகளுக்கு மாதிரி தோ்வுகள் ஏப்.19-ஆம்தேதி முதல் நடத்தப்படவுள்ளது.

இந்த மாதிரி தோ்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூா் மாவட்டத்தைச் சாா்ந்த போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநா்கள் கரூா் மாவட்டம் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 -223555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT