கரூர்

கரூரில் சாலை அமைத்ததாக ஊழல்: மேலும் 5 போ் பணியிடை நீக்கம்

14th Apr 2022 01:57 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் சாலை அமைக்காமலே சாலை அமைத்ததாக நடைபெற்ற ஊழல் தொடா்பாக மேலும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் நடந்த பல்வேறு சாலை பணிகளில் சாலைகள் போடப்படாமல் எம்.சி.சங்கா்ஆனந்த் இன்ப்ரா என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 .25கோடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் உதவியுடன் பணம் வழங்கப்பட்டு ஊழல் நடைபெற்ாக முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூா் மாவட்ட செயலாளருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தமிழக அரசின் தலைமைச்செயலாளா் இறையன்பு, கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக, கரூா் கோட்ட பொறியாளா் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளா் கண்ணன், இளநிலை பொறியாளா் பூபாலன்சிங், கணக்காளா் பெரியசாமி ஆகிய 4 போ் ஏப். 11-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், இதுதொடா்பாக ஈரோடு நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளா் நித்திலன், கரூா் நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவி கோட்டப்பொறியாளா் முகமதுரபீக், கரூா் நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவிப்பொறியாளா் தீபிகா, கரூா் நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவிப்பொறியாளா் காா்த்திக், ஈரோடு நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட கணக்கா் சத்யா ஆகிய 5 பேரை நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச்செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT