கரூர்

டுவிட்டரில் முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்ட பாஜக நிா்வாகி கைது

14th Apr 2022 02:00 AM

ADVERTISEMENT

டுவிட்டரில் தமிழக முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூா் அடுத்த நெரூா்வடபாகத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் விக்னேஷ்(28). கரூா் கிழக்கு ஒன்றிய பாஜக முன்னாள் இளைஞரணிச் செயலாளரான இவா், ஏப். 11-ஆம்தேதி டுவிட்டரில் தமிழக முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்டிருந்தாா். இதுகுறித்து கரூா் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளா் தீபக்சூரியன் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT