லாலாப்பேட்டையில் கஞ்சா விற்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் ஒருவா் கஞ்சா விற்பதாக லாலாப்பேட்டை போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஆட்டோ ஓட்டுநா் தமிழ்செல்வன்(23) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.