கரூர்

கரூா்: மக்கள் குறைதீா் முகாமில் 32 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

12th Apr 2022 12:01 AM

ADVERTISEMENT

 

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 32 பயனாளிகளுக்கு ரூ.3.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா், பொதுமக்களிடம் இருந்து ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 304 மனுக்களை பெற்றாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பேருக்கு காதொலிக்கருவி, 2 பேருக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டத்தின் கீழ் 32 பேருக்கு ரூ.3.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரகவளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்கான தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT