அரவக்குறிச்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து திமுகவினா் திங்கள்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய அமைச்சா் க. பொன்முடி, தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதில், அரவக்குறிச்சியும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, அரவக்குறிச்சி ஏவிஎம் காா்னா் பகுதியில் திங்கள்கிழமை மாலை திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். இந்நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன், துணைத் தலைவா் தங்கராஜ், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.