மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் கரூா் மாநகரக்குழு சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ்.அலுவலகம் முன், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநகரச் செயலாளரும், கரூா் மாநகராட்சி உறுப்பினருமான எம். தண்டபாணி தலைமை வகித்தாா். போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினா் ஹோச்சுமின், பொறுப்பாளா்கள் சக்திவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.