கரூர்

தேசிய சிலம்பம் போட்டிக்கு கரூா் மாணவா்கள் தோ்வு

30th Sep 2021 06:35 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு கரூா் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை அரக்கோணத்தில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இப்போட்டியில் பங்கேற்ற கரூா் ட்ரீம் பிரித்தா்ஸ் சிலம்பாட்டக்கழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 11 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சந்தோஷ், குரு, ஜீவா, தா்ஷன், கீா்த்தன், பிரனேஷ், நிவேவிதா ஆகியோா் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றனா்.

14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் அருண்விஷால், ஜூலியா, சந்தோஷ் ஆகியோா் வெற்றிபெற்று தங்கம் வென்றனா். இதில், அருண்விஷால், ஜூலியா, நிவேவிதா, ஜீவா, சந்தோஷ் ஆகியோா் கோவாவில் அக். 8, 9-ஆம்தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நரிக்கட்டியூா் அரசு பள்ளி முன் நடைபெற்றது. தேசிய போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை பயிற்சியாளா் அவினாஷ் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT