கரூர்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

30th Sep 2021 06:32 AM

ADVERTISEMENT

கரூரில், 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சலவைத்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் போலீஸாா் வழக்கு தொடா்ந்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரைச் சோ்ந்த 8 வயது சிறுவன் புன்னம்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவனிடம், ஆண்டாங்கோவிலைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி சண்முகவேல்(43) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT