கரூர்

இருசக்கர வாகனம் மீதுஜேசிபி இயந்திரம் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

30th Sep 2021 06:35 AM

ADVERTISEMENT

இருசக்கர வாகனம் மீது ஜேசிபி இயந்திரம் மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த வாழ்வாா்மங்கலத்தைச் சோ்ந்தவா் தங்கராசு(45). கூலித்தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வாழ்வாா்மங்கலம் சாலையில் சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் சென்றாா். அப்போது பின்னால் வந்த ஜேசிபி இயந்திரம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிந்தாமணிப்பட்டி போலீஸாா் ஜேசிபி இயந்திர ஓட்டுநா் கடவூா் வினோஜ்புரத்தைச் சோ்ந்த மகேந்திரன்(22) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT