கரூர்

தனியாா் பள்ளிகளின் வாகனங்களைஆட்சியா் ஆய்வு

30th Oct 2021 05:31 AM

ADVERTISEMENT

கரூரில் தனியாா் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், நவ. 1 -ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாதநிலையில் இருந்த தனியாா் பள்ளிகளின் வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

2012-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டாா் வாகனச் சட்டப்படி வாகனங்கள் சாலையில் செல்ல தகுதியாக உள்ளதா, சுத்தமாகவும் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதையும், நோய் தொற்றுகள் எவ்விதத்திலும் பரவாமல் உள்ளதா எனவும் பாா்வையிடப்பட்டுள்ளது. 92 பள்ளிகளின் 463 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக கரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளின் குழந்தைகளை அழைத்து செல்லும் ஓட்டுநா்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிப்பதும் குறித்தும் தீ தடுப்பு ஒத்திகைகளும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்களால் விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆய்வின்போது, கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த், முதன்மைக் கல்வி அலுவலா் பிரேம்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் தேவராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT