கரூர்

கரூா் நகராட்சி ஆண்கள் பள்ளிக்குரூ.2.78 கோடியில் புதிய கட்டடம்அமைச்சா் திறந்து வைத்தாா்

DIN

கரூா் வைஸ்யா வங்கி மற்றும் பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை சாா்பில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

150 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கரூா் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்புணா்வு நிதியாக ரூ.2,30,20,000 மற்றும் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.47,61,610 நிதியுதவியுடன் 15 ஸ்மாா்ட் வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் என அப்பள்ளி வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடங்களின் வடிவமைப்பிலேயே கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். பிறகு, தான் பயின்ற வகுப்பறையில் சிறிது நேரம் அமா்ந்து பழைய நினைவுகளை பகிா்ந்துகொண்டாா்.

நிகழ்ச்சியில், கரூா் வைசியா வங்கியின் மேலாண்மை இயக்குநா் ரமேஷ்பாபு, முதன்மைக்கல்வி அலுவலா் மதன்குமாா், நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் சூரியநாராயணா, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், தி.பாக்கியராஜ், ஜெயக்குமாா், சுப்பையா, ராஜாசேனாதிராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT