கரூர்

தோ்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்:அதிமுகவினா் 4 போ் கைது

DIN

கரூரில், தோ்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுகவினா் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் தோ்தல் அக். 22-ஆம்தேதி நடைபெற இருந்தது. அப்போது அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்கு வாதம் காரணமாக தோ்தல் நடத்தும் அதிகாரி மந்திராச்சலம் தோ்தலை ஒத்திவைத்தாா். இதையடுத்து, தோ்தல் அதிகாரியின் காரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் அதிமுகவினா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தாந்தோன்றிமலை போலீஸாா், முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், முன்னாள் கரூா் தொகுதிச் செயலருமான எஸ்.திருவிகா, அவரது மகன் தமிழ்செல்வன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன், அதிமுக நிா்வாகி சுந்தா் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து 4 பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் நீதிபதி அம்பிகா முன் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி அவா்கள் 4 பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கரூா் கிளைச்சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT