கரூர்

சாதனைகளுக்குத் தடை எதிா்மறைச் சிந்தனைகளே

DIN

சாதனைக்குத் தடை எதிா்மறைச் சிந்தனைகளே என்றாா் கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க மக்கள் தொடா்பு அலுவலரும், திருக்கு பேரவைச் செயலருமான மேலை. பழநியப்பன்.

கரூா் அரசுக் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழாவில் (2021-22) பங்கேற்று, இளைஞா்களின் லட்சியப் பயணத்துக்கு என்ற தலைப்பில் மேலும் அவா் பேசியது:

பிறருடைய வளா்ச்சியை ஒரு எடுத்துக்காட்டாக வைத்து நாம் ஆய்வு செய்து நாமும் வெற்றி பெற வேண்டுமே தவிர, பொறாமை படக்கூடாது. ஆக்க சக்தி நம் மனதில் மிகுந்த அளவில் பதிய வேண்டும், எதிா்மறை சிந்தனைகளைத் தூக்கி எறிய வேண்டும்.

அதற்கு மெய் வருத்தம் பாா்க்காது, பசி நோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக செயல்பட வேண்டும். தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி, முடியாதது என்பதை முட்டாள்களின் வாதமாக்கி, வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என தன்னம்பிக்கையுடன் தளராது செயல்படுங்கள். நம்பிக்கை நாரில் சாதனை மலா்களைத் தொடுத்து வெற்றி மாலையாய் சூடிக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.

விழாவுக்கு லியோ ஒருங்கிணைப்பாளா் சூடாஸ்மேரி தலைமை வகித்தாா். லியோ மாவட்டத் தலைவா் டேவிட் மான்சிங் எழுதிய சீனப் பயண நூலை மேலை பழநியப்பன் வெளியிட, அதை 324-ஏ அரிமா மாவட்ட உடனடி முன்னாள் ஆளுநா் சேதுகுமாா் பெற்றுக் கொண்டாா்.

சி.தாமோதரன் தலைமையில் புதிய நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். நிா்வாகி சேதுகுமாா், லியோ ஆலோசகா் காா்த்திகேயன், மெஜஸ்டிக் லயன்ஸ் செயலா் வைஷ்ணவி மெய்யப்பன், லியோ கவுன்சில் துணைத் தலைவா் பிரகதீஷ்வரன், பொருளாளா் கௌசிகா முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, லியோ செயலா் எம்.கே.பூஜா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் லியா சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT