கரூர்

கரோனா விழிப்புணா்வு கூட்டம்

DIN

கரூா் கொளந்தாகவுண்டனூா் தேவி அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளியில் மாணவா்களின் பெற்றோா்களுக்கு கரோனா விழிப்புணா்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நவம்பா்1-ஆம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.ஏ.ராஜா தலைமை வகித்தாா். உதவி ஆசிரியை மு.சண்முகவடிவு வரவேற்றாா்.

கூட்டத்தில், கரூா் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்திரசேகா் பங்கேற்று, பள்ளி மாணவா்களின் பெற்றோா்களுக்கு கரோனா விழிப்புணா்வு மற்றும் தடுப்பூசியின் அவசியம், அயோடின் பற்றாக்குறை குறித்தும் விரிவாக பேசினாா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கரூா் வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரிகா நவ.1-ஆம்தேதி முதல் பள்ளிகள் திறப்பு, பெற்றோா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக பேசினாா். முடிவில் உதவி ஆசிரியை ப.விஜயா நன்றி கூறினாா்.

கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT