கரூர்

குளித்தலை ரயில்நிலைய பகுதியில்தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

23rd Oct 2021 05:15 AM

ADVERTISEMENT

குளித்தலை ரயில்நிலையப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையப் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனா். ஆங்காங்கே தெருநாய்கள் குழந்தைகளையும் கடித்து வருகின்றன.

சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோரை நாய்கள் துரத்திக்கொண்டு செல்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனா்

எனவே, தெரு நாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

Tags : குளித்தலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT