பள்ளப்பட்டி செல்லும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலையில் குடிநீா் வீணாக வழிந்தோடுகிறது.
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட நீா் உந்தும் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் குடிநீா் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, குரும்பப்பட்டி, பால்வாா்பட்டி, கோவிலூா், வெள்ளோடு ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி செல்லும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக வெளியேறுகிறது. ஆகவே, இந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.