கரூர்

கரூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

23rd Oct 2021 05:21 AM

ADVERTISEMENT

 கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று மனுதாரா் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து விவசாயிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் எம்.லியாகத், வேளாண்மை இணை இயக்குநா் சிவசுப்பிரமணி, மாவட்ட வன அலுவலா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முனைவா்.க.உமாபதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் சைபுதீன் மற்றும் முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT