கரூர்

அரவக்குறிச்சி பகுதியில் மழை பாதிப்புகளை எம்.எல்.ஏ. ஆய்வு

23rd Oct 2021 05:21 AM

ADVERTISEMENT

 அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் இளங்கோ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

அரவக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. மேலும், குடிசைகள் சேதமடைந்தன.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் இளங்கோ வெள்ளிக்கிழமை காலை மழையால் பாதிக்கப்பட்ட பொன்னநகா், அய்யாவுநகா், தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளை பாா்வையிட்டாா். அப்போது, மழையால் சேதமடைந்த குடிசையில் வசித்தவரிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அவருடன், அரவக்குறிச்சி நகரச் செயலாளா் ம.அண்ணாதுரை, மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT