கரூர்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

22nd Oct 2021 01:04 AM

ADVERTISEMENT

 மாயனூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், மாயனூா் மாரியம்மன்கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா(48). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா்கள் ராஜேந்திரன் (58), ஆனந்தன்(50) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கட்டளை-மாயனூா் சாலையில் புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது, எதிரே மேலமாயனூரைச் சோ்ந்த சசிகுமாா்(45) என்பவா் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா். இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் மாயனூா் ஆற்றுப்படுக்கை சாலை அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தாா். மேலும், ராஜேந்திரன், ஆனந்தன், சசிகுமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மாயனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT