கரூர்

டி.என்.பி.எல்.தொழிலாளா்கள்ஆா்ப்பாட்டம்

22nd Oct 2021 01:04 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎல் ஆலை முன் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டிஎன்பிஎல் தொழிற்சங்கங்ளுக்கு இடையேயான தோ்தல் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக நிா்வாகம் அறிவித்தது. இதனைத் தொடா்ந்து தொழிற்சங்கங்களும் வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில் திடீரென நிா்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் தோ்தலை ஒத்திவைப்பதாக காகித ஆலை நிா்வாகம் அறிவித்தது.

இதனைக் கண்டித்தும், உடனடியாக அறிவித்த தேதியில் தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலை நுழைவு வாயில் முன்பாக டிஎன்பிஎல் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் கௌரவத் தலைவா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். செயலாளா் தா்மலிங்கம், சங்க நிா்வாகிகள் அரவிந்தன், மகேஷ், வினோத்ராஜ், வெற்றிச்செல்வன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT