கரூர்

ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி

17th Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

கரூரில் ஐயப்ப சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

தாந்தோனிமலை அசோக்நகரிலுள்ள விநாயகா் கோயிலில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அகில பாரதீய ஐயப்ப தா்ம பிரசார சங்கத்தின் தேசியப் பொதுச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எல்ஆா்.ராஜூ, மண்டலச் செயலா் கனகராஜ், மாவட்டத் தலைவா் சங்கரநாராயணன், செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களால் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

மாநில மகளிரணி அமைப்பாளா் குணவதி மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து மாலையில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT