கரூர்

கரூா் மாநகராட்சியாக மாறுவதால் வரி உயரும் என விஷமப் பிரசாரம்

DIN

கரூா் மாகராட்சியாக மாறுவதால் வரி உயரும் என பொய் பிரசாரம் விஷமப் பிரசாரமாக செய்யப்படுகிறது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் நகராட்சிக்குள்பட்ட 27-ஆவது வாா்டு வையாபுரி நகா்ப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரும் பணி நடைபெற்று வருவதை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு கரூா் மாநகராட்சியாக மாறும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூா் மாநகராட்சியாக மாறுவதால் வரிகள் உயரும் என்ற பொய்யான பிரசாரம் விஷமப் பிரசாரமாக செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி மாநகராட்சியாகவும், பேரூராட்சி நகராட்சியாகவும் தரம் உயரும் போது ஒருபைசா வரி கூட உயராது. தமிழக அளவில் பொதுவாக மாநகராட்சிகள், நகராட்சிகளில் உயரும்போது மட்டுமே வரி உயரும். அதற்கு முன்பு எந்த வரியும் உயராது.

கரூரில் நகரில் ஓடும் இரட்டை வாய்க்கால்களில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டு, முன்பு மக்கள் பயன்படுத்தி வந்ததை போல வாய்க்காலைத் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பேட்டியின்போது கரூா் நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, நகா்நல அலுவலா் லட்சியவா்ணா, பொறியாளா் காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT