கரூர்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள்

17th Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, கரூரில் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு பகுதியிலுள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு, மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா். காளியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் பசுவை சிவசாமி, கரூா் தொகுதி முன்னாள் செயலா் எஸ். திருவிகா, மாவட்டப் பொருளாளா் கண்ணதாசன், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன், கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ், நகரச் செயலா்கள் வை. நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், நகர நிா்வாகிகள் சேரன் பழனிசாமி, பழனிராஜ், பழக்கடை ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் மாவட்ட பாசறைச் செயலா் கமலக்கண்ணன், புன்னம்சத்திரத்தில் க.பரமத்தி ஒன்றியச் செயலா் மாா்க்கண்டேயன், டிஎன்பிஎல் நுழைவுவாயில் அருகே பேரூா் செயலா் சதாசிவம் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை என மாவட்டத்தில் 17 இடங்களில் அதிமுக பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT