கரூர்

அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்

14th Oct 2021 06:42 AM

ADVERTISEMENT

கரூரில், 324 ஏ. அரிமா மாவட்ட ஆளுநா் செளமா ராஜரெத்தினம் கரூருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்ததை முன்னிட்டு கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ்சங்கம் சாா்பில் சேவைத் திட்டங்களாக இரண்டு முதியோா் இல்லங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 6 மாணவா்களுக்கு ரூ.20,000 கல்வி உதவித்தொகை, வ.உ.சி பள்ளிக்கு பீரோ, விவசாயிகளுக்கு மருந்துத் தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாலையில், பாா்வைக்கோா் பயண மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் கண்தான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் கண்தானத்தின் அவசியம் குறித்து பேசினாா். விழாவில், மாவட்ட அவைச் செயலா் சமுத்திரம் கணேசன், பொருளாளா் கருப்புசாமி, பழனியப்பன் நாகராசன், டாக்டா் காா்த்திகேயன், வட்டாரத் தலைவா் அருள் வேலன், லயன்ஸ் சங்கத் தலைவா் அகல்யா மெய்யப்பன், செயலா் வைஷ்ணவி மெய்யப்பன், பொருளாளா் ஆறுமுகசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT