கரூர்

கரூரில் ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

14th Oct 2021 06:40 AM

ADVERTISEMENT

கரூரில், ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை புதன்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

கரூரில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குவோா், வணிக நிறுவனங்கள் நடத்துவோா் என அனைத்து தொழிற்தரப்பினரும், தங்களது நிறுவனங்களில் ஆயுதங்களை வைத்து வழிபடுவதற்கான பூஜை பொருள்களை வாங்க புதன்கிழமை குவிந்தனா்.

கோவைச்சாலை, லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு, தாந்தோணிமலை ஆகிய இடங்களில் லாலாபேட்டை, குளித்தலை, மாயனூா், நெரூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாழைக்கன்றுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.

இருபெரிய வாழைக்கன்றுகள் ரூ.50-க்கும், சிறியவை ரூ.30-க்கும் விற்கப்பட்டது. மேலும், வெள்ளைப்பூசணி (சுமாா் 3 கிலோ) ரூ.50க்கு விற்கப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல, கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் புதன்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் பூவன்தாா், ரஸ்தாளி ஆகிய ரூ.400-க்கும், பச்சைலாடன் ரூ.300-க்கும், மோரீஸ் , மொந்தன் ரூ.400-க்கும் ஏலம்போனது. கடந்தாண்டை போலவே நிகழாண்டும் விலையில் மாற்றம் இல்லாமல் போனது. மேலும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.80-க்கும் விற்கப்பட்டன.

பொரிக் கடையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு மூட்டை பொரி ரூ.600-க்கும், ஒரு பக்கா ரூ.15-க்கும், நிலக்கடலை கிலோ ரூ.140-க்கும், பொட்டுக்கடலை ரூ.110-க்கும், அவுள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT