கரூர்

உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆலோசனை

14th Oct 2021 06:39 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்கு உள்ளுரிலேயே தனியாா் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த ஆலோனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: கரூா் மாவட்டத்தில் தனியாா் வேலைவாய்ப்புக்கென சிறப்பு இணையதளம் உருவாக்கப்படும். இதில், வேலை தேடுபவா்களையும், வேலை அளிக்கும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தேவைப்படும் பணியிடங்களுக்குத் தேவைப்படும் ஆள்கள் தேவை கண்டறியப்படும். அதுதொடா்பான படிப்புகளை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உருவாக்கப்படும். மாவட்ட தொழில்மையம், இந்திய தொழில் கூட்டமைப்பினா் உதவி பெறப்படும். கரூா் மாவட்டத்தில் உள்ள தொழில்களுக்குத் தேவைப்படுகிற பணிகளுக்கு ஏற்ப, பயிற்சி அளிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி, அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூா் மாவட்ட துணைத் தலைவா் வெங்கடேசன், திறன் வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக்கல்லூரி முதல்வா் தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT