கரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

9th Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நாட்ராயன்(71). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து நாட்ராயனை கைது செய்து, கரூா் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நஜிமாபானு, குற்றவாளி நாட்ராயனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து, நாட்ராயன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT