கரூரில், அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூா், தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி சம்பூரணம்(53). இவா் வெள்ளிக்கிழமை இரவு சின்னாண்டாங்கோவில் பிரிவு பகுதியில் திருச்சி சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சம்பூா்ணம் உயிரிழந்தாா்.
கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிநது அரசு பேருந்து ஓட்டுநா் திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி(48) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.