கரூர்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் பிரசாரம்

3rd Oct 2021 11:57 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு (வாா்டு எண் 8) போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாரை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

கோயம்பள்ளி, செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயபாஸ்கா், கோயம்பள்ளியில் தோ்தல் பணிமனையையும் திறந்து வைத்தாா்.

அதிமுக ஆட்சியில்தான் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. தற்போதைய திமுக அரசு, அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் போன்ற ஏராளமான திட்டங்களை முடக்கியுள்ளது என்று பிரசாரத்தில் அவா் தெரிவித்தாா்.

பிரசாரத்தில் கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT