கரூர்

கரூரில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு நாள்

3rd Oct 2021 12:33 AM

ADVERTISEMENT

கரூரில், காந்திஜெயந்தி விழா மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி, காமராஜா் சிலைக்கு காங்கிரஸாரும், காந்தி சிலைக்கு அதிமுக, பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காந்திஜெயந்தியை முன்னிட்டு கரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகராட்சிக்குச் சொந்தமான ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கும், காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கும் வடக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், நகரத் தலைவா்கள் பெரியசாமி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் மாவட்ட அதிமுக சாா்பில் கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் உள்ள காந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில், முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவைசிவசாமி, பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் தொகுதிச் செயலா்கள் எஸ்.திருவிகா, பழக்கடைராஜா, நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன், கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன், நகர நிா்வாகிகள் சேரன்பழனிசாமி, பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் லைட்ஹவுஸ்காா்னரில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத்தலைவா் கே.சிவசாமி தலைமையில் பொதுச் செயலா் நகுலன், தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT