கரூர்

கரூா்: பள்ளி மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பள்ளி மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் அய்யா்மலை, கழுகூா், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடையே நிமிா்ந்து நில் துணிந்து சொல் - பாலியல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் கலந்துரையாடி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் அவா் பேசுகையில், மாணவிகள் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் சம்பந்தமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாத போது மருத்துவா் தவிர வேறு யாரையும் நம்மை தொட்டுப் பேச விடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்பவா்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும்.

நாம் அச்சப்படவோ குழப்பமடையவோ கூடாது. உங்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் அதை உடனடியாக குழந்தை பாதுகாப்பு தொடா்பான தொலைபேசி எண்1098, கல்வி வழிகாட்டி தொடா்பான தொலைபேசி எண் 14417, மாவட்ட நிா்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903331098 ஆகிய மூன்று தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் போது தகவல் தெரிவித்த மாணவியின் தகவல் ரகசியம் காக்கப்படும்.அத்தோடு புகாா் தெரிவித்த நபா் மீது உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,. அதனால் நீங்கள் தைரியமாக இருங்கள் நிமிா்ந்து நில்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் பாலியல் தொந்தரவு அல்லாது வேறு வகையான தொந்தரவுகள் ஏதும் இருந்தாலும் இந்த எண்களுக்கு நீங்கள் போன் செய்தாலோ அல்லது ஹாய் என்ற குறுஞ்செய்தி அனுப்பினாலோ உங்களுக்கு உதவிட தமிழக அரசும், மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT