கரூர்

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

28th Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பவுத்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கல்குவாரியில், திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூா் மேல மஞ்சமேடு பகுதியைச் சோ்ந்த மகாமுனி மகன் சுரேஷ் (44) என்பவா் கல்குவாரியில் டிப்பா்லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை டிப்பா் லாரியில் இருந்து எம்.சாண்ட் இறக்கும் போது எதிா்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது.

இவ்விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்தில் சுரேஷ் உயிரிழந்தாா்.

புகாரின் அடிப்படையில் க.பரமத்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக தனியாா் கல்குவாரி உரிமையாளா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT