கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு

28th Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் துணை பொது மேலாளா் (மனிதவளம்) சுரேஷ், முதுநிலை மேலாளா் (இயந்திரவியல்) அசோகன், துணை மேலாளா் (மனிதவளம்) சங்கா், உதவி மேலாளா் (பாதுகாப்பு) சங்கிலிராஜன் மற்றும் உதவி அலுவலா் (மனிதவளம்) கோவிந்தன் ஆகியோா் தலைமை வகித்து, அரசமைப்பு தின உறுதிமொழி வாசிக்க, அவற்றை காகித நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT