கரூர்

நடிகா் சூா்யா, ஜோதிகா,ஜெய்பீம் இயக்குநா் மீதுநடவடிக்கைக் கோரி மனு

26th Nov 2021 04:19 AM

ADVERTISEMENT

 நடிகா் சூா்யா, ஜோதிகா மற்றும் ஜெய்பீம் இயக்குநா் ஆகியோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலா் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை அளித்த மனுவில், ஜெய்பீம் படத்தில் வன்னியா்களின் புனித அடையாளமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தி வன்னிய சமூகத்தை வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டோா் பழங்குடியினா் மற்றும் வன்னியா் சமூகத்தின் இடையே ஜாதி வன்மத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குநா் ஞானவேல், நடிகா் சூா்யா ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT