கரூர்

கரூரில் இல்லம்தேடி கல்விவிழிப்புணா்வு நிகழ்ச்சி

26th Nov 2021 04:18 AM

ADVERTISEMENT

கரூரில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இல்லம் தேடி கல்வி கலைப் பயண விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள 706 அரசுப்பள்ளிகளில் 2,510 குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 1,680 குடியிருப்புப் பகுதிகளில் முதல்கட்டமாக இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இக்கலைப் பயணத்தில் ஒரு குழுவிற்கு 9 கலைஞா்கள் வீதம், மொத்தமாக 12 குழுக்களுக்கு108 கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா், ஒரு நாளைக்கு 2 பள்ளிகள், 2 கிராமங்கள் என இந்நிகழ்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், முதன்மைக் கல்வி அலுவலா் இரா. மதன்குமாா், உதவித் திட்ட அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT