கரூர்

அரவக்குறிச்சியில் தொடா் மழை

26th Nov 2021 04:19 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் கருமேகம் சூழ்ந்து இருந்தது. தொடா்ந்து மாலை 3 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினா். சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

Tags : அரவகுறிச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT