கரூர்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை ஆா்ப்பாட்டம்

25th Nov 2021 09:05 AM

ADVERTISEMENT

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கரூரில் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை (நவ.26) ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்துக்கு, தொமுச மாவட்ட தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத்தலைவா் ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஜிபிஎஸ்.வடிவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் அறிவிக்க வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்திய விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, நவம்பா் 26-ஆம் தேதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது,

தொடா்ந்து கரூா் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT