கரூர்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்கு

24th Nov 2021 07:08 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்கக் கோரி, கரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 350 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கரூா் எல்என்எஸ் கிராம நிா்வாக அலுவலா் சுகுணா புகாரளித்தாா்.

இதன் பேரில், கரூா் மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன், பொதுச் செயலா் நகுலன் உள்ளிட்ட 350 போ் மீது கரூா் நகரக் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT