கரூர்

கரூரில் கடும்பனி மூட்டம்:வாகன ஓட்டிகள் அவதி

21st Nov 2021 11:50 PM

ADVERTISEMENT

கரூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வந்த வாகனங்கள் கூட தெரியாத வகையில் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மஞ்சள் விளக்கை எரியவிட்டவாறுச் சென்றனா். இந்த பனி மூட்டம் காலை 7 மணி வரை நீடித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT