மதுபோதையை மறக்க இயலாமல் கரூரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன்(45). தொழிலாளி. இவா், கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையானாராம். மதுபோதையை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க இயலாமல் அவதியுற்ற அவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.