கரூரில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் மற்றும் நுகா்வோா்கள் பதிவு செய்த குறைகள் மீது முகவா்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடா்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு நுகா்வோா்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.