கரூர்

தொடா் மழை: அரவக்குறிச்சியில் வீடு சேதம்

4th Nov 2021 06:23 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே தொடா் மழை காரணமாக ஓட்டுவீடு சேதமடைந்தது.

அரவக்குறிச்சி பகுதியில் கடந்த ஒரிரு தினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், மொடக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பழனி மனைவி வேலம்மாள் வசித்து வந்த ஓட்டு வீடு செவ்வாய்க்கிழமை இரவு ஓடுகள் சரிந்து சேதமடைந்தது. வேலம்மாள் அருகே உள்ள தனது மகன் வீட்டில் தங்கியிருந்ததால் தப்பினாா்.

தகவலறிந்து வந்து வருவாய்த்துறையினா் சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT