கரூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி

1st Nov 2021 12:16 AM

ADVERTISEMENT

பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், கரூரில் தள்ளுவண்டி மற்றும் காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் கரூா் பிரதான கிளை முதன்மை மேலாளா் சூா்யபிரகாஷ் தலைமை வகித்து, 10 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

முன்னதாக துணை மேலாளா் குரூஸ்ஜெயசீலன் வரவேற்றாா். வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT