கிருஷ்ணராயபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வங்கியின் அலுவலக அறையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 3 குளிா்சாதனக் கருவி, 2 கணினிகள், 8 சிசிடிவி கேமராக்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளா் அன்பரசி(35) அளித்த புகாரின்பேரில், மாயனூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.