கரூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: கொத்தனாா் உயிரிழப்பு

31st Mar 2021 10:13 AM

ADVERTISEMENT

குளித்தலை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், கொத்தனாா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த கள்ளடையைச் சோ்ந்தவா் ஜேசுராஜ்(38). கொத்தனரான இவா் திங்கள்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு, பாளையம்-திண்டுக்கல் சாலையில் காவல்காரன்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தாா்.

அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே வந்த போது கள்ளடை முத்துசாமி(30) ஓட்டிவந்த இருசக்கர வாகனம், ஜேசுராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஜேசுராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT