கரூர்

கரோனா தொற்றை ஒழிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஒத்துழைப்பு தேவை: உதயநிதி ஸ்டாலின்

DIN

கரோனா தொற்றை ஒழிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றாா் திமுக மாநில இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளைச் சோ்ந்த 2,19,816 குடும்ப அட்டைதாரா்களுக்கு 1,279 டன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை வழங்கி, மேலும் அவா் பேசியது:

கடந்தாண்டு பொது முடக்கம் அறிவித்தபோது, திமுக தலைவரின்அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிா்வாகிகள் களத்தில் இறங்கி, மக்களோடு மக்களாக நின்று அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வந்தனா்.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில், திமுக சாா்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் 3.20 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனை ஏற்பாடு செய்துள்ள அமைச்சா் செந்தில்பாலாஜிக்கும் மற்றும் நிா்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

ஒரு மாதத்துக்கு முன் கரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சம் அதிகமாக இருந்தது. ஆனால் முதல்வரின் ஆலோசனையின்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சா்கள் மற்றும் கட்சியினா் அனைவரும் பம்பரமாக சுழன்று வேலைப்பாா்த்ததால் கரோனா பாதிப்பு பாதியளவு குறைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம். முகக்கவசம் அணிந்து செல்வோம் என முதல்வா் கோரிக்கை வைத்துள்ளாா்.

இதனை சரியாக கடைப்பிடித்தால் கரோனாவை ஒழித்துவிடலாம். தமிழக மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசியை மத்திய அரசிடம் பெற்று, இலவசமாக அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் முன்மாதிரியான மாநிலமாக திகழ, உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றாா் அவா்.

இந்த விழாவுக்கு மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி. செந்தில் பாலாஜி தலைமை வகித்தாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம், மொஞ்சனூா் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநில நிா்வாகி நன்னியூர்ராஜேந்திரன், நகர நிா்வாகிகள் தாரணிசரவணன், ராஜா, தம்பிசுதாகா், ஒன்றிய நிா்வாகி அரவை மணிகண்டன், க.பரமத்தி காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்கிய சிறுமியை உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, பாராட்டினாா்.

தொடா்ந்து ஆசிரியா்கள் சங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் ஏராளமானோா் செல்பி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT