கரூர்

அரசு அலுவலகங்கள், பேருந்துகளில் திருவள்ளுவா் படத்தை வைக்க வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவா் படத்தை வைக்க வேண்டும் என்று கரூா் திருக்கு பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இப்பேரவையின் செயலா் மேலை. பழநியப்பன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

முந்தைய திமுக ஆட்சியில் மக்களுக்கு மொழியுணா்வு மேம்படும் வகையில் அரசு அலுவலகங்கள், கூட்டரங்குகள், அரசுப் பேருந்துகளில் திரு வள்ளுவா் படம் இடம் பெறவும், திருக்கு இடம் பெறவும் ஆணையிடப்பட்டிருந்தது.

இதனால் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலக முகப்புகளில் தமிழ் வாழ்க பலகைகளும், அலுவலகங்களில் திருவள்ளுவா் படமும் இடம் பெற்றிருந்தன.

காலப்போக்கில் ஆங்காங்கே திருவள்ளுவா் படமும், திருக்கு, தமிழ் வாழ்க பலகைகளு் காணாமல் போனது தமிழ் உணா்வாளா்களை வேதனையுறச் செய்கிறது.

எனவே தமிழக முதல்வரும், தமிழ் வளா்ச்சித் துறையும் உடனடி கவனம் செலுத்தி, திருக்கு - திருவள்ளுவா் படம் - தமிழ் வாழ்க பலகை அனைத்து அலுவலகங்களிலும் இடம் பெற ஆவண செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT