கரூர்

கரூா் அரசு அருங்காட்சியகம் சொந்த கட்டடத்துக்கு மாற்றம்: அமைச்சா் உறுதி

DIN

மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்தி சொந்த கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூரில் திண்டுக்கல் சாலையில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால சிலைகளின் மாதிரிகள், கற்சிலைகள், பயன்படுத்தப்பட்ட தொன்மையான பொருள்கள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்ட அவா், தொடா்ந்து, பயன்பாடின்றி இருக்கும் கரூா் நகராட்சியின் பழைய கட்டடத்தில் அருங்காட்சியகத்தை மாற்றி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்தாா்.

பின்னா் அமைச்சா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் பழைய திண்டுக்கல் சாலை ஜவஹா் பஜாா் பகுதியில் மாவட்ட அருங்காட்சியகமும், மாரியம்மன்கோவில் அருகில் உள்ள அகழ்வைப்பகமும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு அருங்காட்சியகங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளதால் பொதுமக்கள் எளிதில் சென்று பாா்க்க இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த அருங்காட்சியகங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அமைப்பதற்கும், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் அரசின் சொந்தக் கட்டடத்தில் அமைப்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாற்றியமைக்கப்படும் அரசு அருங்காட்சியகத்தில் கரூா் மாவட்டத்தில் உள்ள வரலாற்று அறிஞா்களின் உதவியோடு மாவட்டத்தின் தொன்மையை, பழம்பெருமையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான தகவல்களை, தொன்மையான பொருள்களின் வடிவங்களை காட்சிப்படுத்தவும், முப்பரிமாண வடிவில் செய்திகளை விளக்கும் கருவிகள் பொருத்தவும், பாா்வையாளா்கள் அமா்ந்து வரலாற்று செய்திகளை அறிந்துகொள்ளும் வகையிலான அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கரூா் நகராட்சி ஆணையா் சு.ராமமூா்த்தி, நகராட்சி பொறியாளா் நக்கீரன், அரசு அருங்காட்சியக காப்பாளா் மணிமுத்து உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT